வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக கோபமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ” இந்த அவை விவாதம் நடத்தவும், பிரச்னைகளை எழுப்பவும் தான் உள்ளது. கோஷம் எழுப்பவும், அமளியை ஏற்படுத்தவும் இல்லை” எனக்கூறினார்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 3வது நாளாக இன்றும் பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பால், தயிர் ஆகியவை மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.,க்கள் அவற்றை கொண்டு வந்து அவையின் மையப்பகுதியில் நின்று கோஷம் எழுப்பினர். பதாகைகளையும் கொண்டு வந்திருந்தனர்.
இதனால், கோபமடைந்த சபாநாயகர் ஓம்பிர்லா கூறுகையில், இந்த பதாகைகளை கொண்டு வந்து காண்பிப்பதற்கு மக்கள், உங்களை லோக்சபாவிற்கு அனுப்பவில்லை. அவற்றை செய்து அவையின் மாண்பை கெடுக்கிறீர்கள். அர்த்தமுள்ள விவாதத்தை தான் மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். விவாதம் நடத்தவும், பிரச்னைகளை எழுப்பவும் தான் இந்த அவை உள்ளது. பதாகைகளை எழுப்பவும், அமளியில் ஈடுபடுவதற்கும் அல்ல. சட்ட விதிகளின்படி விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கிறேன். அமளியில் ஈடுபட்டால், அனுமதி அளிக்க மாட்டேன். உங்களது இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றார்.
இருப்பினும் அமளி தொடர்ந்ததால், லோக்பசா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement