செல்வராகவன் கதாநாயகனாக நடித்துவந்த, மோக் ஜி-யின் ‘பகாசூரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இதில் போலி காதல் கல்யாணங்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட ‘திரௌபதி’ படம், குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்குவதாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. எனினும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், மோகன் ஜி அடுத்ததாக ‘பகாசூரன்’ என்றப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில், இயக்குநர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நட்டி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பாரூக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
It’s a Dream selfie .. #FanBoy #Inspiration.. Thanks a lot @selvaraghavan sir for this dream to come true.. #Bakasuran #பகாசூரன் pic.twitter.com/5aDEs2tgzD
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 19, 2022
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தநிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், சில நாட்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க உள்ளன. விரைவில், அதாவது செப்டம்பர் மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஈசன் அருளால் #பகாசூரன் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .. விரைவில் திரையில் #Bakasuran @selvaraghavan @natty_nataraj @SamCSmusic @ProBhuvan @Gmfilmcorporat1 pic.twitter.com/MyYSmVcmIg
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 19, 2022
இதனிடையே, செல்வராகவன் உடன் எடுத்த செல்ஃபி படம் ஒன்றினை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் மோகன் ஜி. அந்த ட்விட்டர் பதிவிற்கு ரிப்ளே செய்திருந்த செல்வராகவன், ’தனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. உங்களுடனும், உங்களது அறிவார்ந்த டீமுடனும் பணியாற்றியதில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவனின் அந்த ட்விட்டர் பதிவிற்கு, ’இந்ந வாய்ப்பு வழங்கியதற்கு பாதம் பணிந்த நன்றிகள் சார்’ என்று மோகன் ஜியும் பதில் அளித்து இருந்தார்.