விப்ரோ: லாபத்தில் 21 சதவீதம் சரிவு.. என்ன காரணம்..?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ரெசிஷன் அச்சம் காரணமாகப் புதிய வர்த்தகமும் குறைந்து வரும் காரணத்தால் ஜூன் காலாண்டில் அடுத்தடுத்து அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் சந்தை கணிப்பைக் காட்டிலும் குறைவான லாபத்தையும், வருமானத்தையும் பெற்று வருகின்றன.

ஏற்கனவே டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகியவை சந்தை முதலீட்டாளர்களை அதிகளவில் ஏமாற்றியுள்ள வேளையில், இன்று விப்ரோ மோசமான காலாண்டு முடிவுகளை வெயிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த சில காலாண்டுகளாக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த விப்ரோ ஜூன் காலாண்டில் மோசமாக லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

விப்ரோ

விப்ரோ

விப்ரோ புதன்கிழமை, ஜூன் 2022 உடன் முடிவடைந்த 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இக்காலாண்டில் வரிக்குப் பிந்தைய அதன் ஒருங்கிணைந்த லாபத்தில் (PAT) 20.94% சரிந்து 2,563.6 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது என அறிவித்துள்ளது.

லாபம்

லாபம்

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் விப்ரோ நிறுவனம் 3,242.6 கோடி ரூபாயை ஒருங்கிணைந்த லாபமாகப் பெற்று இருந்த வேளையில் செலவுகள் + முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் லாபத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. மேலும் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 16.96 சதவீத சரிவை விப்ரோ பதிவு செய்துள்ளது.

வருவாய்
 

வருவாய்

விப்ரோ நிறுவனத்தின் வருவாய் இந்த ஜூன் காலாண்டில் 21,528 கோடி ரூபாயாக உள்ளது, இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் உயர்வு, கடந்த ஆண்டு ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகமாகும். பங்குச்சந்தைகளில், விப்ரோவின் பங்குகள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 43% சரிந்துள்ளன.

ஊழியர்கள்

ஊழியர்கள்

ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனம் சுமார் 15,446 ஊழியர்களைப் புதிதாக இணைத்துள்ளது. மேலும் 10000 க்கும் அதிகமான பிரஷ்ஷர்களையும் இக்காலாண்டில் பணியில் சேர்த்து உள்ளது.

 தியரி டெலாபோர்டே

தியரி டெலாபோர்டே

விப்ரோவின் வளர்ச்சி பாதையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை நாங்கள் செய்துள்ளோம், மேலும் எங்கள் ஆர்டர் முன்பதிவுகள் மொத்த ஒப்பந்த மதிப்பின் அடிப்படையில் 32% வருடாந்திர வளர்ச்சி அடைந்துள்ளன. மேலும் வரலாறு காணாத அளவில் பைப்லைன் வர்த்தகம் உள்ளது என விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே தெரிவித்துள்ளர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Wipro Q1 net profit fall 21 percent to ₹2,563.6 crore; Check Thierry Delaporte reasons

Wipro Q1 net profit fall 21 percent to ₹2,563.6 crore; Check Thierry Delaporte reasons விப்ரோ: லாபத்தில் 21 சதவீதம் சரிவு.. என்ன காரணம்..?

Story first published: Wednesday, July 20, 2022, 17:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.