வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்தாண்டு (2021) மட்டும் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
லோக்சபாவில் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக 2019ல் 1,44,017 பேரும், 2020ல் 85,256 பேரும், 2021ல் 1,63,370 பேரும் என கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டுக் கொடுத்துள்ளனர். இவா்கள் அனைவரும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக 1,70,795 பேர் அமெரிக்க குடியுரிமையும், 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 35,435 பேர் பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளனர். 2015 முதல் 2021 வரை மொத்தம் 9.24 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement