3 வருடங்களுக்கு பிறகு வெப் தொடர் மூலம் வருகிறார் அமலா பால்

மைனா படத்தின் மூலம் புகழ்வெற்ற அமலாபால் குறுகிய காலத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவிற்கு வேகமாக வளர்ந்தார். அதற்கு காரணமான இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.

திருமண முறிவுக்கு பிறகு பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது கேரியர் மிக மெதுவாகவே அமைந்தது. தமிழில் கடைசியாக ஆடை படத்தில் நடித்தார். அதன்பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஓடிடி அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது விக்டிம் என்ற வெப் தொடர் மூலம் மீண்டும் வருகிறார். இந்த தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒரு குற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ படும் வேதனைகளை சொல்லும் தொடராக இது உருவாகி உள்ளது.

இதில் சிம்பு தேவன், ராஜேஷ் எம், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் தனித்தனி கதைகளை இயக்கி உள்ளனர்.. பிளாக் டிக்கெட் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆக்சஸ் பிலிம் பேக்டரி இதனை தயாரித்துள்ளது. இந்தத் தொடரில் அமலா பாலுடன், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், லிசி ஆண்டன், பிரசன்னா, நடராஜ சுப்ரமணியன், தம்பி ராமையா, கலையரசன் ஹரிகிருஷ்ணன், மற்றும் நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.