கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிசார் தொடர்ந்தும் கைது செய்து வருகின்றனர்.
மேலும், இன்று (20.07.2022) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று, இரண்டு சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை மொத்தமாக 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரையிலும் 3225 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1177 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.