ClearTrip: பிரபல இணையதளத்தில் கை வைத்த ஹேக்கர்கள் – உடனடியாக பாஸ்வேர்டை மாற்ற கோரிக்கை!

ClearTrip Cyber Attack: நாட்டில் உள்ள பிரபல டிராவல் இணையதளம் ஒன்றின் தகவல்கள் கசிந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், பிளிப்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமான நிறுவனம் மற்றும் ஹோட்டல் முன்பதிவு இணையதளமான கிளியர்ட்ரிப்பின் தகவல்கள் கசிந்ததை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தகவல்களின்படி, ClearTrip அதன் உள்அமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தரவு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக செய்தி:
Nothing Phone 1 ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேயில் பச்சை நிற நிழல்!

இவ்வாறு ஹேக் செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களில் எந்த சமரசமும் இல்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய நிறுவனம்

Cleartrip வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிறுவனம் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தது. அதில், “நிறுவனத்தின் அமைப்புகளுக்குள் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக Cleartrip-இன் உள் அமைப்புகளுக்குள் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்பட்டது. சில தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலதிக செய்தி:
வெறும் 99 ரூபாய்க்கு Infinix 32 Y1 ஸ்மார்ட் டிவி – ஷாக் ஆகாம முதல்ல ஆர்டர போடுங்க!

Cleartrip இணையத் தாக்குதலுக்கு உள்ளாவது இது முதல் முறை அல்ல என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். முன்னதாக 2017 ஆம் ஆண்டில், Turtle Squad என்ற குழு சில நிமிடங்களுக்கு நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்தது.

முக்கியத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறது

தரவு கசிந்த பிறகு, வாடிக்கையாளர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு நிறுவனம் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. “இது உங்களுக்கு கவலை அளிக்கக் கூடும் என்பதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். சில விவரங்களைத் தவிர, உங்கள் ClearTrip கணக்கு தொடர்பான எந்த முக்கியத் தகவலும் எங்களிடம் கசிய வில்லை,” என்று பிரபல வணிக பத்திரிகையான Economic Times இடம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், கூகுள் வருவாயில் இனி உங்களுக்கும் பங்கு உண்டு! அதிரடி உத்தரவை பிறப்பிக்கும் அரசு!

உடனடியாக பாஸ்வேர்டுகளை மாற்றுங்கள்

Cleartrip தனது வாடிக்கையாளர்களின் கடவுச்சொல்லை மாற்றுமாறு அறிவுறுத்துகிறது. நிறுவனம் தற்போது அதன் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து தகவல் திருட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி:
Instagram: டிஜிட்டல் கடைக்கு வழிவகை செய்யும் இன்ஸ்டாகிராம் – புதிய அம்சங்கள் அறிமுகம்!

வால்மார்ட் நிறுவனமான பிளிப்கார்ட், ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில் ClearTrip நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் இந்திய பிசினஸ் ஜாம்பவான் அதானியும் குறைந்தளவு பங்குகளை வைத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.