கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிட்ட நிலையில், ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது, எமக்கு முன்னால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன என இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ரியாட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
The country is in a very difficult situation, we have big challenges ahead, says Sri Lanka’s newly appointed President Ranil Wickremesinghe: Reuters
(File photo) pic.twitter.com/ZfAjhYS5Iw
— ANI (@ANI) July 20, 2022
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும் புதிய அதிபர் நவம்பர் 2024 வரை முன்னாள் அதிபர் பதவிக்காலத்தில் பணியாற்றுவார். ஜனாதிபதித் தேர்தலில் அழகப்பெருமவை வெற்றியடையச் செய்வதற்கு தமது கட்சியும் எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளும் இணைந்து செயற்படும் என பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை
1978 முதல், இலங்கையின் வரலாற்றில், அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு நாடாளுமன்றம் வாக்களித்ததில்லை. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் மக்களினால் அதிபர்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1993 ஆம் ஆண்டு அதிபர் ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது மட்டுமே, அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. அப்போது, பிரேமதாசவின் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டார்.
இலங்கையில் தற்போது தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபர், 2024 நவம்பர் மாதம் வரை ராஜபக்சேவின் எஞ்சிய பதவிக்காலத்தில் பணியாற்றுவார். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் SLPP கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது, இது கிட்டத்தட்ட 100 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இன்றைய தேர்தல் நாட்டின் சிக்கல்களை சீர் செய்வதற்கான முக்கியமான படியாக இருக்கும்.
மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ