மேகதாது அணை விவகாரம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை20) நடந்தது.
அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் விவாதிக்கலாம், ஆனால் முடிவெடுக்கக் கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை தேர்தல்
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 3 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். டலஸ் அழகப்பெருமவுக்கு சஜித் பிரேமதாசா, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் இன்று உத்தரவு
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி..யான தடகள வீராங்கனை பி.டி., உஷா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. கடும் பொருளாதார சிக்கல், உள்நாட்டு குழப்பம், மக்கள் தன்னெழுச்சி போராட்டம் என இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி காணப்படுகிறது.
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தற்போது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – தமிழக அரசு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் . மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை நடவடிக்கை.
கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் . 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
குட்கா முறைகேடு வழக்கு- முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை.
சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி வருவதால், தாமதமாக ரயில்கள் வருவதாக பயணிகள் அவதியடைந்துள்ளனர். செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது . சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர்ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது.