Vivo T1x Launch: விவோவின் பட்ஜெட் 4ஜி செல்போன் ரூ.11 ஆயிரத்துக்கு அறிமுகம்!

Vivo T1x Specifications: சீன நிறுவனமான விவோ தனது புதிய பட்ஜெட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் புராசஸர், 5000mAh பேட்டரி, டிரிப்பிள் ரியர் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

விவோ டி1எக்ஸ் போன் விலை மற்றும் சலுகைகள் (Vivo T1x Offer Price)

பட்ஜெட் விவோ ஸ்மார்ட்போனானது கிராவிட்டி பிளாக், ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வருகிறது. இதன் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,999 ஆகவும், 4ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999 ஆகவும், 6ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி:
இதில் 50 மெகாபிக்சல் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் மெமரி ஆதரவு உள்ளது. Vivo T1x 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படும். இதனை ஊக்குவிக்க 18W வேகமாக சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும். பெயர் விவோ டி1 எக்ஸ் கட்டமைப்பு நெகிழி இயங்குதளம் ஆண்ட்ராய்டு 12 (Funtouch OS 12) புராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 திரை 6.58″ அங்குல முழு எச்டி+ எல்சிடி பேனல் / வாட்டர் டிராப் நாட்ச் பின்புற கேமரா 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் மேக்ரோ + 2 மெகாபிக்சல் பொக்கே முன்புற கேமரா 8 மெகாபிக்சல் ஸ்லாட் இரண்டு 4ஜி சிம் ரேம் 4ஜிபி / 8ஜிபி சேமிப்பகம் 64 ஜிபி / 128ஜிபி ஆதரவு வைஃபை, ப்ளூடூத் 5.0, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம் சென்சார் அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி இடங்காட்டி ஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSS பேட்டரி 5000mAh / 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு நிறங்கள் கிராவிட்டி பிளாக், ஸ்பேஸ் ப்ளூ விலை 4ஜிபி+64ஜிபி – ரூ.11,999 |4ஜிபி+128ஜிபி – ரூ.12,999 |6ஜிபி+128ஜிபி – ரூ.14,999 வெளியீடு ஜூலை 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.