உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில் பணவீக்கம் என்பது 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான லெவலை எட்டியுள்ளது.
அமெரிக்காவும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி அதிகரிப்பு உள்பட பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
எனினும் தற்போது வரையில் பணவீக்கம் அதற்கெல்லாம் செவி சாய்த்ததாக தெரியவில்லை எனலாம்.
விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?!
வட்டி அதிகரிக்கலாம்
அமெரிக்காவில் நிலவி வரும் இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்திலும், அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரெசசன் அச்சம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது உச்சம் எட்டி வரும் நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இதனால் ரெசசனுக்கான சாத்திய கூறுகள் 40% அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்திலேயே 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 9.1% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம் எவ்வளவு அதிகரிக்கலாம்?
சில நிபுணர்கள் வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர். எனினும் கடந்த சில தினங்களாகவே 75 அடிப்படை புள்ளிகளாவது அதிகரிக்கலாம் என்ற யூகங்கள் நிலவி வருகின்றன. இது குறித்து ஜூலை 14 – 20 வரையிலான காலகட்டத்தில் 98 – 102 பொருளாதார நிபுணர்களிடம் நடத்திய ஆய்வில். 75 அடிப்படை புள்ளிகளாவது வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
தொடர்ந்து அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் அது இந்தியாவிலும் பல வகையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். முதலாவதாக வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
இரண்டு இந்தியாவில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேறலாம்.
இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு மேலும் வழிவகுக்கலாம்.
இது இந்திய வங்கிகளை கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
இதனால் நிறுவனங்களும் மறைமுகமாக தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.
What will happen to India if the Federal Reserve Bank of America increases interest rates?
What will happen to India if the Federal Reserve Bank of America increases interest rates?/அமெரிக்கா எடுக்கபோக்கும் முக்கிய முடிவு.. இந்தியாவுக்கு என்ன பிரச்சனை!