அமெரிக்க அதிபர் பைடனுக்கு புற்றுநோயா?: வெள்ளை மாளிகை விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: தனக்கு புற்றுநோய் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, பைடன் பதவியேற்பதற்கு முன்னர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் என விளக்கம் அளித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதத்தின் போது, டெலவரில் தனது குழந்தை பருவம் குறித்து ஜோ பைடன் பேசினர்.

latest tamil news

அப்போது பைடன் பேசும் போது, டெலவரில் உள்ள என்னுடைய குழந்தை பருவ வீட்டிற்கு அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன. அதில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் தீங்கை நம்மால் என்னவென்று யூகிக்க முடியாது. அதன் தீங்கைப்பற்றி அறியாமலேயே என் அம்மா எங்களை வளர்த்தார். அமெரிக்க உறைபனி காலம் என்னவென்றால் உங்களுக்கு தெரியும். ஜன்னலில் இருந்து எண்ணெய் படலம் விழுவதை தடுக்க கண்ணாடி வைபர் ஜன்னலை அமைக்க வேண்டியிருந்தது. அந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் தான், என்னுடன் வளர்ந்த பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோம். அமெரிக்காவில் டெலவரில் தான் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து பலரும் பல கேள்விகளை எழுப்பினர். சிலர் பைடன் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கருத்து பதிவிட்டனர்.

latest tamil news

இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை அளித்த விளக்கத்தில், பைடன், அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னர், தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார் எனக்கூறியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.