புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்குதல் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வித் துறை இயக்குனர் ருத்தரகவுடு, மாநில திட்ட இயக்குனர் தினகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினரான கவர்னர் தமிழிசை, புதிய முறையில் கல்வி கற்பிப்பதற்கான வழிகாட்டி கையேடுகள் மற்றும் மாதிரிகளை வெளியிட்டார்.பின் அவர் பேசுகையில், ‘புதுச்சேரியில் அரசு பள்ளிகளை டிஜிட்டல் வகுப்பறைகள் கொண்டதாக, உலகத் தரத்திற்கு உயர்ந்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு மொழியையும் திணிப்பதற்கான கூறு இல்லை. தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் விஞ்ஞானிகளாக மேதைகளாக உயர்ந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது குறித்து கல்வி அமைச்சருடன் பேசி இருக்கிறேன். சீருடையை தைத்து கொடுப்பதா அல்லது பணமாக தருவதா என்பது பற்றி ஆலோசனை நடக்கிறது. மாணவர் பஸ்களை இயக்குவதற்கான வழிமுறைகள் விரைவு படுத்தப்படும்’என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement