இந்தியாவில் கடன் மோசடி 10 மடங்கு உயர்வு.. ரூ.2.4 லட்சம் கோடி பாதிப்பு..!

2012 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் வேண்டுமென்றே கடன் செலுத்தாதவர்கள் (Wilful loan defaults ) 10 மடங்கு அதிகரித்து, வங்கிகளின் 2.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இந்த மாபெரும் கடன் மோசடிகளில் ABG கப்பல் கட்டும் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் மற்றும் இரண்டு சகோதரர்களைத் தான் மிகப்பெரிய தொகையை மோசடி செய்து முக்கியக் குற்றவாளிகளாகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை, தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டவர்கள் ஆனால் கடனை செலுத்த மறுப்பவர்கள் என வரையறுக்கிறது.

கடன் மோசடிகள்

கடன் மோசடிகள்

வங்கிகள் பொதுவாக இத்தகைய காரணங்களுக்கு, இந்தத் திட்டத்திற்கு என்று தான் கடன் வழங்கும், ஆனால் அப்படி வாங்கப்பட்ட கடன்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தான் அதிகளவில் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

12,000 வழக்குகள்
 

12,000 வழக்குகள்

25 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கடன் நிலுவையில் உள்ள கணக்குகள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில் மார்ச் 31, 2022 வரை 12,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரிஷி அகர்வால், அரவிந்த் தாம், மெஹுல் சோக்சி மற்றும் சண்டேசரா சகோதரர்களைக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் என டைம்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டு உள்ளது.

ஏபிஜி ஷிப்யார்ட்

ஏபிஜி ஷிப்யார்ட்

ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் ஆன ரிஷி அகர்வால் சுமார் ரூ.6,382 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கடன் மோசடிகளில் இது முக்கியமானது.

 Amtek Auto

Amtek Auto

ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆம்டெக் ஆட்டோ லிமிடெட் மற்றும் துணை நிறுவனங்கள் மூலம் அதன் உரிமையாளர் அரவிந் தாம் தலைமையில் இக்குழுமம் ரூ.5,885 கோடி மதிப்பிலான கடனை திருப்பிச் செலுத்தவில்லை.

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள்

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள்

சண்டேசரா சகோதரர்கள், நிதின் மற்றும் சேத்தன் ஆகியோர் இந்திய அரசின் படி இப்பட்டியலில் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக (FEO) மூன்றாவது இடத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனமான ஸ்டெர்லிங் குளோபல் ஆயில் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வாங்கிய ரூ.3,757 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

2.4 லட்சம் கோடி ரூபாய்

2.4 லட்சம் கோடி ரூபாய்

இப்படி இந்தியாவில் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் நிலுவை வைத்துள்ள தொகை மட்டும் சுமார் 2.4 லட்சம் கோடி ரூபாய் இது மத்திய அரசு கிராமப்புற இந்தியாவுக்கான அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு உறுதி அளிக்கும் திட்டமான MGNREGA க்கான மொத்த பட்ஜெட் தொகையில் 42 சதவீதமாகும். மேலும் இது 2022 பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.86,200 கோடியை விட 2.7 மடங்கு அதிகம்.

ரூ.2,000 கோடி மேல் மோசடி

ரூ.2,000 கோடி மேல் மோசடி

மேலே குறிப்பிட்ட 3 நிறுவனங்கள் உடன் சேர்த்து மொத்தம் 9 நிறுவனங்கள் ரூ.2,000 கோடி மேல் கடனை வாங்கி விட்டு மோசடி செய்துள்ளது. இதில் பலர் வெளிநாட்டிற்குத் தப்பியோடியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய முதல் தொழிலதிபர் யார் தெரியுமா..? கமெண்ட் பன்னுங்க.

9 நிறுவனங்கள்

9 நிறுவனங்கள்

இந்த 9 நிறுவனத்தில் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் (திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் பலர்), சஞ்சய் மற்றும் சந்தீப் ஜுன்ஜுன்வாலா (ரெல் அக்ரோ), மெஹுல் சோக்ஸி (கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட்), சஞ்சய் சுரேகா (கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்), அதுல் புஞ்ச் (பஞ்ச் லாயிட் லிமிடெட்) மற்றும் ஜதின் ஆர் மேத்தா (வின்சம் டயமண்ட்ஸ் & ஜூவல்லரி லிமிடெட் மற்றும் பலர்).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s Wilful loan defaults grow 10 times from 2012 to Rs 2.4 lakh crore

India’s Wilful loan defaults grow 10 times from 2012 to Rs 2.4 lakh crore இந்தியாவில் கடன் மோசடி 10 மடங்கு உயர்வு.. ரூ.2.4 லட்சம் கோடி பாதிப்பு..!

Story first published: Thursday, July 21, 2022, 17:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.