புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழே பதிவானது. ஆனால் நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,654 லிருந்து 1,48,881 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 18,294 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 லிருந்து 4,31,50,434 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,854 லிருந்து 1,48,881 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 45 பேர் பலியாகினர். இதுவரை 5,25,870 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 200.91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 29,12,855 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.