இந்திய நிறுவனங்களை துரத்தும் 79 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடன் பிரச்சனை.. அடுத்தது என்ன..?

செவ்வாயன்று அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 80.06 ஆகச் சரிந்தது, மேலும் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் மதிப்பு 2.4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதன் மூலம் ஆசியாவிலேயே 3வது மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் உள்ளது. இதோடு நடப்பு ஆண்டில் மட்டும் பங்குச்சந்தையில் இருந்து 29.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். ப்ளூம்பெர்க் இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகள் குறித்து 1999 ஆம் ஆண்டு முதல் அனைத்து தரவுகளையும் வைத்துள்ளது.

இந்த மோசமான சரிவை பதிவு செய்தது இந்த வருடம் தான் என ப்ளூம்பெர்க் தரவுகள் கூறுகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் இக்கட்டான சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது.

நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூபாய் மதிப்பு 25% சரிவு.. என்ன காரணம்..?!

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்னும் அதிகமாகச் சரியும் முன்பு இந்திய நிறுவனங்கள் வாங்கிய வெளிநாட்டுக் கடனை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் தீவிரமாக இயங்கி வருகிறது.

வெளிநாட்டுக் கடன்

வெளிநாட்டுக் கடன்

இல்லையெனில் வருமானத்தில் மிகப்பெரிய தொகையை வெளிநாட்டுக் கடனுக்கான மட்டுமே செலவழிக்க வேண்டிய மோசமான நிலை உருவாகும். இதனால் லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என்பது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

79 பில்லியன் டாலர்
 

79 பில்லியன் டாலர்

மார்ச் மாத முடிவின் தரவுகள் படி இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடனாக 79 பில்லியன் டாலர் உள்ளது, இது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 44 சதவீதம் என ஆர்பிஐ தரவுகள் கூறுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால் இந்திய நிறுவனங்களின் cost of repaying அளவு 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பற்ற வெளிநாட்டு கடன்களின் விபரத்தை ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் டாலரை வெளிப்படுத்துவதில் நிறுவனங்கள் மெத்தனமாக இருந்தன. பிற நாடுகளைக் காட்டிலும் இந்திய ரூபாய் குறைந்த நிலையற்ற தன்மை உடன் இருப்பதை உறுதி செய்தது.

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

உலக நாடுகளில் ஏற்கனவே ரெசிஷன் அச்சம் இருக்கும் காரணத்தால் அன்னிய முதலீடுகள் குறைவது மட்டும் அல்லாமல் பல துறையில் வெளிநாட்டுத் திட்டங்கள் வருவதும் குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களுக்குக் கூடுதலான டாலர் முதலீடுகள் கிடைக்க வாய்ப்புகள் இல்லை.

கடன் என்பது பெரும் பிரச்சனை

கடன் என்பது பெரும் பிரச்சனை

இதனால் வெளிநாட்டில் இருந்து வாங்கிய கடனுக்கு அதிகப்படியான ரூபாயை செலவு செய்து இந்திய நிறுவனங்கள் கடனுக்குக்காண தவணையைச் செலுத்த வேண்டும். ரெசிஷன் அச்சத்தில் இருக்கும் பொருளாதாரத்திற்கு இது வெளிநாட்டுக் கடன் என்பது பெரும் பிரச்சனை தான்.

இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian companies unhedged debt of $79 billion; Big Trouble for Indian Rupee INR

Indian companies unhedged debt of $79 billion; Big Trouble for Indian Rupee INR இந்திய நிறுவனங்களைத் துரத்தும் 79 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடன் பிரச்சனை.. அடுத்தது என்ன..?

Story first published: Thursday, July 21, 2022, 20:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.