Nothing Phone 1 OTA Update: நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்காக, முதல் அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனுக்கான முதல் OTA அப்டேட்டை நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தியா உள்பட அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நாடுகளின் பயனர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் கோப்பின் அளவு 96MB ஆக இருக்கிறது. பயனர்கள் தங்கள் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அப்டேட் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
புதிய அப்டேட்டில் அனைத்தும் சரிசெய்யப்படும்
இந்த அப்டேட்டிற்கு பிறகு நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் பயனர் அனுபவம் நன்றாக இருக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும், இண்டர்பேஸ் பக்கத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Amazon Prime Day Sale 2022: சாம்சங், ஆப்பிள் என முன்னணி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்!
புதிய அப்டேட் நத்திங் போனின் பின்பக்க பேனலின் எல்இடி லைட் இடைமுகத்தை இன்னும் சிறப்பாக மாற்றும். மிக முக்கியமாக இந்த போனின் பேட்டரி ஆயுள், HDR10+ அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போனில் ஏற்பட்ட சிக்கல்
முன்னாள் ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெயின் புதிய தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், ஜூலை 12 அன்று அதன் முதல் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தியது. போன் அறிமுகம் செய்த ஒருசில நாள்களில் பயனர் தரப்பில் இருந்து பல புகார்கள் எழத் தொடங்கின.
நத்திங் ஸ்மார்ட்போனின் திரை, கேமராவில் சிக்கல்கள் இருப்பதாக பயனர்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் புகார் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து, பல பயனர்களின் போன்களை நிறுவனம் மாற்றிக் கொடுத்துள்ளது.
Instagram: டிஜிட்டல் கடைக்கு வழிவகை செய்யும் இன்ஸ்டாகிராம் – புதிய அம்சங்கள் அறிமுகம்!
ஆனால், மாற்று போனிலும் அதே பிரச்சினை இருப்பதாக பயனர்கள் தொடர்ந்து புகார்களை அடுக்கி வந்தனர். அதன் தனித்துவமான அம்சங்கள், வடிவமைப்பு காரணமாக போன் (1) அதிகம் பேசப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட மொபைலாக வலம் வந்தது.
Redmi K50i 5G: சூப்பர் அம்சங்களுடன் ரெட்மியின் முதல் அல்ட்ரா பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
உறுதியளித்த நத்திங்
நத்திங் போன் 1 இன் முதல் அப்டேட் அனைத்து பிழைகளையும் சரி செய்யும் என்று நிறுவனம் கூறுயிருக்கிறது. மேலும் இதன் அனுபவம் இன்னும் சிறந்தாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.
புதிய அப்டேட்டுக்குப் பிறகு, போனின் கேமரா, டிஸ்ப்ளே உடன் பிற அம்சங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதுப்பிப்பில் கேமரா ஆப் போர்ட்ரெய்ட் பயன்முறை, மேம்பட்ட பயனர் அனுபவம், மேம்படுத்தப்பட்ட ஒலி, மேம்படுத்தப்பட்ட எல்இடி விளக்கு, HDR10+ ஆதரவு ஆகியவற்றை பார்க்கலாம்.