கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி ஏற்றார். அவருக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், மக்களின் எழுச்சிமிக போராட்டம் காரணமாக, பிரதமர், அதிபர் உள்பட அனைவரும் தங்களது பதவகிளை ராஜினாமா செய்துவிட்டு ஒடிய நிலையில், புதிய அதிபர் தேர்வு நடைபெற்றது. இதில் 3 பேர் களத்தில் நின்ற நிலையில் அதிக வாக்குகள் பெற்று ரணில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை மக்கள் ரணிலுக்கு எதிராகவும் போராடி வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ரணிலுக்கு எதிராக தற்போதும் போராட்டக்காரர்கள் அமைதியான வழியில் போராடி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.