இலங்கையில் நிலவி வரும் அசாதரணமான நிலைக்கு மத்தியில இனி என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் எழுமே என்ற அச்சம் எழுந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவின் படி, நாட்டில் உணவுப்பற்றாக்குறை 57.4% ஆக மே மாதத்திலேயே தொட்டது. இது தற்போது இன்னும் அதிகரித்திருக்க கூடும். இனி வரும் மாதங்களில் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னும் மோசமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!
அன்னிய செலவாணி குறைவாக இருக்கும் நிலையில் அத்தியாவசிய உனவு பொருட்கள், மருந்து பொருட்கள், எரிபொருள் இற்ககுமதி என முக்கிய பொருட்களே முறையாக கிடைக்காமல் போராடி வருகின்றனர்.
பொருளாதாரம் டூ அரசியல்
இந்த நிலையில் தான் பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் நெருக்கடியாகவும் மாறியது. பல தலைவர்கள் வெளியேறினர். தற்போது புதிய இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்தெடுக்கப்பட்ட்டுள்ளார். அரசியல் நெருக்கடி ஒரு புறம் இருந்தாலும் பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் காத்திருக்கின்றன.
ஐஎம்எஃப் கருத்து
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, இலங்கையில் நிலவி வரும் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பிரச்சனையானது மற்ற நாடுகளுக்கு ஒரு எடுத்துகாட்டு என கூறியுள்ளார்.
குறிப்பாக கடன் அளவு, கட்டுப்படுத்தபட்ட கொள்கை இடைவெளி என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும் என எச்சரித்துள்ளார்.
துரதிஷ்டவசமான காலம்
உலகளாவிய கண்ணோட்டம் என்பது பிரகாசமானதாக இருக்க வேண்டும்.. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி இல்லை. பிரகாசமான வளர்ச்சி வாய்ப்பு குறைவாக உள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது என சர்வதேச நாணய நிதியம் முன்பு எச்சரித்துள்ளார்.
இலங்கை தான் உதாரணம்
இதன் காரணமாக கடன் அளவுகள் மற்றும் கொள்கைகளில் கட்டுப்பாடு என பல அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்., இதற்கு முக்கிய உதாரணம் இலங்கையே என ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
ஐஎம்எஃப்-ன் இந்த கருத்துகள் இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடி, அன்னிய செலவாணி கையிருப்பு, அத்தியாவசிய இறக்குமதி செய்ய முடியாமை, குறிப்பாக எரிபொருள், உணவு பொருள், மருத்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாமை என பல காரணிகளுக்கு மத்தியில் வந்துள்ளது.
திவால் நிலை
அரசு திவால் நிலையை எட்டி விட்டதாகவும் சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் கோட்டபய ராஜபக்ஷா கையாண்டதன் காரணமாக, அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தொடர் முதலீடு வெளியீடு
இதற்கிடையில் வளர்ந்து வரும் நாடுகள் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. ஆக இது மேற்கோண்டு நெருக்கடியினை எதிர்கொள்ளலாம் என ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
எனினும் ஜார்ஜீவா எந்த நாடுகளின் பெயரையும் அவர் நேரடியாக குறிப்பிடவில்லை. அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகிதம் அதிகரிப்பு, கரன்சி மதிப்பு சரிவு, அன்னிய செலவாணி கையிருப்பு சரிவு என பல காரணிகளும் பொருளாதாரத்தினை பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
இலங்கையை அடுத்து மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியினை சரிவினைக் கண்டு வரும் நாட்டில், பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானில் எரிபொருள் மானியத்தை அரசாங்கம் நிறுத்திய பின்னர், மே மாத இறுதியில் 90% எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதற்கிடையில் ஐஎம்எஃப்- உடன் நிதியுதவிக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. அதோடு செலவினை கட்டுப்படுத்தவும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றது.
யாருக்கு எச்சரிக்கை
பல நாடுகள் அதிகரித்து வரும் பொருட்களின் விலையால் பொருளாதாரம் போராடி வருகின்றன. மாலத்தீவு மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு நாடுகளும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கும் விளிம்பில் உள்ளனர்.
மாலத்தீவு
மாலத்தீவின் பொதுக்கடன் என்பது சமீப வருங்டங்களில் அதிகரித்துள்ளதை கண்டுள்ளது. அது இபபோது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% மேலாக உள்ளது.
இலங்கையை போன்று சுற்றுலாவை பெரிதும் நம்பியிருந்த மாலத்தீவின் பொருளாதாரத்தினை, கொரோனா மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.
பங்களாதேஷ்
இதே பங்களாதேஷத்திலும் பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இது 7.42% ஆக எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு கையிருப்பும் குறைந்து வருவதாக் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும், வெளி முதலீடுகளை அதிகரிக்கவும், அரசு வேகமாக செயல்படுத்தவும் அறிக்கை கூறுகின்றது.
Sri Lanka’s Economic crisis: Sri Lanka’s situation is a valid lesson for other countries
Sri Lanka’s Economic crisis: Sri Lanka’s situation is a valid lesson for other countries/இலங்கையின் மோசமான நிலை.. மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்!