இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

கொழும்பு:
லங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்க உள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததை எடுத்து அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நாட்டின் இடைக்கால அதிபராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரம் சிங்கே உள்ளிட்ட மூவர் களம் கண்டனர். இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 144 வாக்குகள் பெற்று இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் எட்டாவது அதிபராக தேர்ந்தெடுத்துக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கே, இன்று பதவியேற்க உள்ளார்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவர் பதவியில் தொடர்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.