ஈரோடு மாவட்டத்தில் கிரேன் வண்டி மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்த நிலையில், கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி உள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் காவல்துறையினர், உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கிரேன் வண்டி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.