ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர்(46). இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தனது இரண்டு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பீட்டர் பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார். பின்பு பள்ளியில் மகள்களை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஐயப்பன் நகர் பகுதியில், அந்த வழியாக வந்த லாரி ஒன்று பீட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பீட்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர், உயிரிழந்த பீட்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.