செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் கிழக்கு உக்ரைனில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றையொட்டிய பகுதிகளில் இந்தச் செயல்பாடுகள் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து ரஷ்யாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத வகையில் படைவிலக்கம் செய்யும் தங்கள் நோக்கம் இன்னும் நீடிப்பதாகத் தெரிவித்தார். .