உலக நாடுகள் சந்தித்துவரும் பிரச்சினை சுவிட்சர்லாந்தையும் பாதிக்கலாம்… சுவிஸ் அரசு எச்சரிக்கை


உலகம் முழுவதும் நிலவிவரும் எரிபொருள் பிரச்சினையால் சுவிட்சர்லாந்தும் பாதிக்கப்படலாம் என சுவிஸ் அரசு எச்சரித்துள்ளது.

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் ஆற்றல், அதாவது எரிவாயு,எண்ணெய் முதலான பொருட்கள் தொடர்பில் ஐரோப்பாவில் நிலவிவரும் நிலையற்ற தன்மை சுவிட்சர்லாந்தையும் பாதிக்கலாம் என எச்சரித்துள்ள சுவிஸ் அரசு, அடுத்த குளிர்காலத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் முதலான விடயங்கள் நாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

பெடரல் ஆற்றல் அலுவலகத்தின் இயக்குநரான Benoît Revaz கூறும்போது, ஐரோப்பாவை மையமாகக் கொண்டு முதன்முறையாக உலகம் ஆற்றல் நெருக்கடியை சந்தித்துவருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிபொருள் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஜேர்மனியுடன் ஒரு ஒப்பந்தம் செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், எரிவாயு வழங்கல் தொடர்பில் இத்தாலியுடன் பேச்சுவார்த்தை துவங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் மின் நிறுவனங்கள் கூட்டமைப்பின் இயக்குநரான Michael Frank கூறும்போது, மின் தட்டுப்பாடு அபாயம் என்பது நிதர்சனமான ஒன்று என்றும் அது குறிப்பிடத்தக்க அளவில் அமைந்துள்ளது என்றும், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

உலக நாடுகள் சந்தித்துவரும் பிரச்சினை சுவிட்சர்லாந்தையும் பாதிக்கலாம்... சுவிஸ் அரசு எச்சரிக்கை | World Is Facing May Also Affect Switzerland

Photo – worldradio.ch

ஆகவே, இந்த குளிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதை சமாளிப்பதற்காக, அலுவலகங்களிலும் வீடுகளிலும் மின்சார பயன்பாட்டைக் குறைத்தல், நீராவிக் குளியல் எடுக்கும் இடங்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றில் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துதல் போன்ற அத்தியாவசியமற்ற மின் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், மற்றும் மிக அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் முதலான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

கடைசி கட்ட நடவடிக்கையாக மின் வெட்டு முதலான நடவடிக்கைகளும் திட்டத்தில் உள்ளன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.