இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்பது பல்வேறு தரப்பு மாணவர்களின் கனவாக இருக்கும். பலரும் சிறு வயதில் இருந்தே தங்கள் குழந்தைகளிடம் சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். ஏனெனில் ஐஐடி-யில் படித்தால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காணலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு.
கூகுள் சுந்தர் பிச்சை முதல் அர்விந்த் கெஜ்ரிவால் வரையில் என பலரும் ஐஐடியின் முன்னாள் மாணவர்களே.
ஆக அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐஐடி-யில் படிக்க, அதுவும் இலவசமாக படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது நல்ல விஷயம் தானே.
2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்?
என்ன கோர்ஸ் அது?
ஐஐடி பாலக்காடு இலவசமாக 12 வார கோர்ஸ் ஒன்றினை அறிவித்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு குறித்தான கோர்ஸ் தான்.
இது குறுகிய காலமாக இருந்தாலும் ஐடி துறை சார்ந்தவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கலாம். குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு குறித்தான வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இத்துறையில் தேவை மிக அதிகம் எனலாம். ஆக ஐடி துறை சார்ந்தவர்களுக்கு இது மிக பயனுள்ள ஒன்றாகவும் இருக்கலாம்.
பயன்பாடு என்ன?
ஆன்லைனில் வழங்கப்படும் இந்த இலவச கோர்ஸ், Applied Accelerated Artificial Intelligence என அழைக்கப்படும். இது ஹெல்த்கேர் மற்றும் ஸ்மார்ட்கேர் போன்ற தொழில் துறை பயன்பாட்டு நிகழ்வுகளில் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை செயல்படுத்த தேவையான கணினி திறன்களை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிந்து கோள்ள வேண்டியது என்ன?
இது இலவசமாக வழங்கப்படும் ஒரு கோர்ஸ், 12 வாரம் படிப்பாகும்.
இதற்காக ஹூப்ளியில் உள்ள KLE டெக்னாலஜிக்கள் யூனிவர்சிட்டியின் பேராசிரியர் சத்யத்யன் சிக்கரூர்- ஆல் நடத்தப்படும். இவர் தவிர இன்னும் பல்வேறு பேராரிசியர்களும் வழி நடத்த உள்ளனர்,
பாட த்தை கற்க விண்ணப்பதாரர்கள் கணினி சம்பந்தமான திறனுடனுன் இருக்க வேண்டும். குறிப்பாக உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், கம்யூட்டர் பற்றிய ஆழ் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
யாருக்கு ஏற்றது?
இது குறிப்பாக முதுகலை பட்டதாரி மாணவர்கள், பி ஹெச் டி படிப்பு படிக்கும் மாணவர்களை இலக்காக கொண்டுள்ளது. இது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளில் இருந்தும் இருக்கலாம். இதில் 3ம் ஆண்டு அல்லது 4,ம் ஆண்டு மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பணிபுரியும் ஊழியர்களாக கூட இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னவெல்லாம் அடங்கும்
இதில் AI சிஸ்டம் ஹார்டுவேர், AI ஆக்சிலரேட்டர்கள், ஜிபியுக்கள், கன்டெய்னர்கள் மற்றும் IDE அறிமுகம், சிஸ்டம் சாப்ட்வேர் ஆப்ரேட்டிங் செய்ஸ்டம் அறிமுகம், விஸ்வலைஷேசன், கிளவுட் போன்ற பல உள்ளடக்கங்களையும் இந்த பாடம் கொண்டு இருக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் சான்றிதழ் பெற விரும்பினால் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத வேண்டும். இதில் வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு NPTEL மற்றும் IIT சென்னை லோகோவுடன் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பிக்க https://onlinecourses.nptel.ac.in/noc22_cs83/preview என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
எப்போது தொடங்கும்
இந்த பாட திட்டம் ஆனது ஜூலை 25 அன்று தொடங்கவுள்ளது. அக்டோபர் 14 அன்று முடிவடையவுள்ளது. இதற்கு பதிவு செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 1 ஆகும். இதற்காக தேர்வு அக்டோபர் 29 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IIT palakkad offers free 12 week online course: Who can join?
IIT palakkad offers free 12 week online course: Who can join?/ஐஐடி பாலக்காடு வழங்கும் இலவச கோர்ஸ்.. அதுவும் 12 வாரம்.. யாருக்கு ஏற்றது.. எப்படி இணைவது?