கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தரது மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் பள்ளியில் சந்தேகமான முறையில் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக் கொள்ளாமல் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 17ஆம் தேதி அந்தப் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.
இது சம்பந்தமாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு முறை பள்ளி மாணவியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதுவரை அவரது உடல் அவரது பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், அப்படி உடலைப் பெற்றுக் கொண்டால் அவரது உடல் இன்று அவரது சொந்த கிராமமான பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதி சடங்கு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அந்த சமயத்தில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக இறுதி சடங்கில் கலந்து கொள்ளலாம். தேவையற்ற இடங்களில் கூட்டம் கூட கூடாது. தேவையில்லாத தகவல்களை வதந்தியாக பரப்பக் கூடாது பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நானூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்புகளையும் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். காவல்துறை எச்சரிக்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
அந்த கிராமத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அந்த வாகனத்தில் யார் வருகிறார்கள் என்ற குறிப்பு எடுக்கப்படுகிறது. வாகன எண் பதிவு செய்யப்படுகிறது. இப்படி பெரிய நெசலூர் கிராமம் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM