வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் 141 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கடந்து வந்த கடின பாதைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர், காமன்வெல்த்தில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல வாழ்த்துகள் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,”வீரர், வீராங்கனைகள் தங்கள் மீதான எதிர்பார்ப்புகளை மறந்து விட வேண்டும். முடிந்தவரை சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.
ஒலிம்பிக் பாட்மின்டனில் 2 பதக்கம் வென்ற சிந்து, பெண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், குத்துச்சண்டை வீரர்கள் ஷிவா தபா, சுமித், பாட்மின்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்சயா சென் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தவிர 3000 மீ., ‘ஸ்டீபிள் சேஸ்’ வீரர் அவினாஷ் சபிள், பாரா குண்டு எறிதல் வீராங்கனை ஷர்மிளாவும் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement