”குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது முக்கியமானது” என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில், ”தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கமம்தான் திருமணம். அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் ஆகிய இருவரின் கடமை. பிரிவு என்கிற துரதிர்ஷ்டத்தால் கணவன் மனைவிக்கு பாதிப்பு அதிகம் இல்லை. குழந்தைகள் அதன் பாதிப்பை உணர்வதுடன், மன வலியை அனுபவிக்கின்றனர்.
வெறுப்பையும், அச்சத்தையும் ஒரு குழந்தைக்கு கற்பிக்கும் போது, அது குழந்தையின் மனநலத்துக்கு ஆபத்தாகி விடும். குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது முக்கியமானது. கணவன் – மனைவியாக கருதாமால், விருந்தினர்களாக பழகி, ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். அதன்மூலம் குழந்தையின் நேரத்தை மகிழ்வானதாக மாற்ற வேண்டும்” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: ஹார்ட் டிரைவை கைப்பற்றிய புலனாய்வு குழு! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவிழுமா மர்மமுடிச்சு?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM