உலகிலேயே மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் முதலீட்டுச் சந்தையில் சாதனைகளைப் படைப்பது மட்டுமே லட்சியமாகக் கொண்டு இருந்த வேளையில், 50 வருடத்தில் மோசமான நிலையை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் இதுவரையில் யாரும் எதிர்கொள்ளாத அதிகப்படியான நஷ்டத்தையும் எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளது.
கொரோனா மற்றும் ரஷ்ய – உக்ரைன் போர், சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று ஆகியவற்றின் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்ற நிலையில் முதலீட்டுச் சந்தையும், முதலீட்டாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இந்தச் சுனாமியில் சிறிய முதலீட்டாளர்கள், பெரிய முதலீட்டாளர்கள் என வித்தியாசம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்!
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் விரலுக்கு ஏத்த வீக்கம் போல் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளனர். அந்த வகையில் பிளாக்ராக்-ன் பாதிப்பு எவ்வளவு தெரியுமா..
பிளாக்ராக்
பிளாக்ராக் என்னும் முதலீட்டு நிறுவனத்தைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும், உலகிலேயே 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களில் முதலீடு செய்து நிர்வாகம் செய்து வரும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகும். நியூயார்க்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் உலகில் பெரும்பாலான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
லேரி ஃபிக்
1988 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பிளாக்ராக் ஆரம்பம் முதல் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக லேரி ஃபிக் திகழ்கிறார். 2021 ஆம் ஆண்டில் மட்டும் பிளாக்ராக் சுமார் 1917 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை மட்டுமே ஈட்டியுள்ளது.
பிளாக்ராக் இந்தியா
நியூயார்க் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள பிளாக்ராக் பங்கு மதிப்பு 1.02 சதவீதம் அதிகரித்து 634.73 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளாக்ராக் நிறுவனம் இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கி முதல் ரிலையன்ஸ், டிசிஎஸ், ஏர்டெல் வரையில் பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
1.7 லட்சம் கோடி டாலர் நஷ்டம்
சுமார் 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வாகம் செய்து வரும் பிளாக்ராக் 2022ஆம் ஆண்டில் உலகில் எந்த ஒரு நிறுவனமும் பதிவு செய்யாத நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை. 2022ன் முதல் 6 மாதத்தில் மட்டும் பிளாக்ராக் 1.7 டிரில்லியன் டாலர் அதாவது 1.7 லட்சம் கோடி டாலர் அளவிலான முதலீட்டாளர்கள் பணத்தை இழந்துள்ளது.
சிஇஓ லேபி ஃபிக்
இந்நிலையில் பிளாக்ராக் நிறுவனத்தின் சிஇஓ லேபி ஃபிக் கூறுகையில் கடந்த 50 வருடத்தில் 2022-ஐ போல் மோசமான வருடத்தை இதுவரை பார்த்தது இல்லை. இந்த மோசமான நிலை பங்குகளுக்கும் பொருந்தும், பத்திர சந்தைக்கும் பொருந்தும் எனக் காலாண்டு முடிவுகளில் லேரி முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் தெரிவித்தார்.
BlackRock: world’s largest asset manager lost $1.7 trillion in 6months; Larry Fink says 2022 is worst in 50yrs
BlackRock: world’s largest asset manager lost $1.7 trillion in 6months; Larry Fink says 2022 is worst in 50yrs சாதனைகள் மட்டுமே படைக்கும் BlackRock சறுக்கியது.. 50 வருடத்தில் மோசமான சரிவு..!