* ராஜேந்திர பிரசாத் மட்டுமே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் (1952, 1957 தேர்தல்). அதிக நாட்கள் (4490) பதவி வகித்தவர், பதிவான ஓட்டுகளில் அதிக சதவீதம் (98.99%) பெற்றவர்.
* போட்டியின்றி தேர்வான ஒரே ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி (1977).
* 1967ல் 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த காலம் (1 ஆண்டு, 355 நாட்கள்) பதவி வகித்தவர். இவர் பதவியில் இருக்கும் போதே (1969, மே 3) மறைந்தார். 5வது ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவும் பதவிக்காலத்தில் மறைந்தார்.
* துணை ஜனாதிபதியாக இருந்த ஆறு பேர், பின் ஜனாதிபதியாக பதவியேற்றனர்.
* ஜனாதிபதி தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் (9,05,659) வென்றவர் கே.ஆர்.நாராயணன். 2வது இடத்தில் அப்துல்கலாம் (8,15,518) உள்ளார்.
* குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் (87,967) வென்றவர் வி.வி.கிரி.
* அதிக வயதில் (77) ஜனாதிபதியாக பதவியேற்றவர் கே.ஆர்.நாராயணன். இளம் வயதில் (64 ஆண்டு, 67 நாள்) பதவியேற்றவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.
* ஒருமுறை மட்டுமே ஆளும் அரசின் வேட்பாளர் தோல்வியடைந்தார். 1969 தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி(காங்.,), வி.வி.கிரியிடம் தோல்வி அடைந்தார்.
* 15 ஜனாதிபதிகளில் காங்., 7, பா.ஜ., 2 (ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு), ஜனதா கட்சி 1, சுயேச்சை 5 பேர்.
* இந்தியாவின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது ஆறு ஜனாதிபதிகளுக்கு (ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், அப்துல் கலாம், வி.வி.கிரி, பிரணாப் முகர்ஜி) வழங்கப்பட்டது.
திரவுபதி முர்மு, 1958, ஜூன் 20ல் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி கிராமத்தில் பிறந்தார். இவர் ‘சான்டல்’ பழங்குடியினத்தை சேர்ந்தவர். பி.ஏ., பட்டப்படிப்பை முடித்த இவர் பள்ளி ஆசிரியராகவும், தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், பின் ஒடிசா நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.
* 1997 : பா.ஜ. வில் சேர்ந்தார். ரைராங்பூர் நகராட்சி கவுன்சிலரானார். மாநில எஸ்.டி., பிரிவின் துணை தலைவரானார்.
* மார்ச் 6, 2000 – ஆக. 6, 2002 : ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சர். 2002 – 2004 மே 16 வரை மீன்வளத்துறை அமைச்சர்
2006 – 2009 : மாநில பா.ஜ., பழங்குடியின பிரிவின் தலைவர்
* 2007: சிறந்த எம்.எல்.ஏ.,வுக்கான ‘நில்கந்தா’ விருதை பெற்றார்.
* 2009: இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,
* 2010 – 2015 : மயூர்பஞ்ச் மாவட்ட பா.ஜ., தலைவர்
* 2013 – 2015 : பா.ஜ., எஸ்.டி., பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர்
* 2015 மே 18 – 2021 ஜூலை 12 : ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர்
* 2022 ஜூன் 21: தே.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு.
* ஜூலை 21 : ஜனாதிபதி தேர்தலில் வெற்றி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்