டாடா ப்ராஜெக்ட்ஸ்-ன் புதிய தலைவர் விநாயக் பாய்.. யார் இவர்..?

டாடா ப்ராஜெக்ட்ஸ் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் முன்னணி தொழில்துறை உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

பெரிய மற்றும் சிக்கலான நகர்ப்புற மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிபுணத்துவம் கொண்டு உள்ளது.

இந்த நிறுவனம் தான் தற்போது கிருஷ்ணகிரி-யில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையைக் கட்டி வருகிறது. இந்நிலையில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்குப் புதிய நிர்வாக இயக்குனரை டாடா குழுமம் நியமித்துள்ளது.

கிருஷ்ணகிரி டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை நிலை என்ன தெரியுமா..?

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழுமம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் TATA Projects நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக விநாயக் பாய் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக விநாயக் தேஷ்பாண்டே சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில் அவர் பணியில் இருந்து ஒய்வு பெறும் வேளையில் விநாயக் பாய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

விநாயக் பாய்

விநாயக் பாய்

விநாயக் பாய் முன்னணி பொறியியல் மற்றும் EPC நிறுவனங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். பொறியியல் வடிவமைப்பு, தொழில்நுட்ப உரிமம், திட்ட மேலாண்மை, வணிக மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் பணிபுரியும் பல்வேறு குழுக்களில் முக்கியப் பதவிகளை வகித்தார்.

விநாயக் பாய் கல்வி தகுதி
 

விநாயக் பாய் கல்வி தகுதி

புனேவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், புனேவில் உள்ள சிம்பயோசிஸில் மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டமும், ஐஐடி பாம்பேயில் வணிக நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் நிர்வாக எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

டாடா ப்ராஜெக்ட்ஸ்

டாடா ப்ராஜெக்ட்ஸ்

டாடா ப்ராஜெக்ட்ஸ் சுத்திகரிப்பு நிலையங்கள், சாலைகள், பாலங்கள், ஒருங்கிணைந்த ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள், வணிகக் கட்டிடம் மற்றும் விமான நிலையங்கள், மற்றும் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்புகள், இரசாயன செயல்முறை ஆலைகள், நீர் மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் சுரங்க மற்றும் உலோக சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு ரெடிமேட் கட்டுமான தீர்வுகளை வழங்குகிறது.

Air India : 4500 ஊழியர்கள் விஆர்எஸ்.. டாடா குழுமம் அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vinayak Pai appointed as Managing Director of TATA Projects

Vinayak Pai appointed as Managing Director of TATA Projects டாடா ப்ராஜெக்ட்ஸ்-ன் புதிய தலைவர் விநாயக் பாய்.. யார் இவர்..?

Story first published: Thursday, July 21, 2022, 18:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.