டெல்லி :நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இன்று ஆஜராகிறார்.ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி இன்று ஆஜராகிறார். சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நாடுதழுவிய தர்ணாவில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.