பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் – முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார்

இலங்கையில் இன்றைய தினம் முக்கிய அரசியல் நிகழ்வுகள் பல பதிவாகியுள்ளன. இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இது தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்கள் தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.

அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1. இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு

2. ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தவுடன் ரணில் வழங்கிய முதல் நியமனம்

3. ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்புக்காக அரச தலைவருக்கான சிவப்பு கம்பளத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பதவியேற்பு நிகழ்வுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கள் தடைப்பட்டுள்ளன.

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> ரணிலுக்கு ஏற்பட்ட சங்கடம் – பதவியேற்பு நிகழ்வின் போது தடைப்பட்ட மின்சாரம்

4. ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஊழல் முறைமைக்கு எதிராகவும் எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> ரணிலுக்கு எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும்: எம்.ஏ.சுமந்திரன்

5. கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முக்கியஸ்தர்களான வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இடையூறு ஏற்படுத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றில் இவர்கள் இருவரும் முன்னிலையாக தவறியதால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் இருவருக்கு பிடியாணை

6. வழிமுறை திட்டமோ, அறிவோ இல்லாத போராட்டம் காரணமாக இறுதியில் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதுடன் போராட்டகாரர்கள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> முட்டாள் போராட்டகாரர்களால் கோட்டாபய வீட்டுக்குச் சென்றார் – ரணில் ஜனாதிபதியாகி விட்டார்! விமல் வீரவங்ச சீற்றம்

7. இலங்கையின் பெரும்பான்மையான பிரஜைகளின் ஆதரவுடன் இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால் இந்த மாற்றம் சாத்தியமானது என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> ரணில் ஜனாதிபதியானது தொடர்பில் சந்திரிகா வெளியிட்டுள்ள பதில்

8. போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> “கோ-ஹோம்-ரணில்” போராட்டக்காரர்களுக்கு இடத்தை ஒதுக்கினார் ரணில்! முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார்

9. கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு எதிரில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அங்கிருக்கும் போராட்டகாரர்கள் தீர்மானித்துள்ளனர்.

போராட்டகாரர்கள் அந்த இடத்திற்கு நோ டீல் கம என பெயரிட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது, அவரை அந்த பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> முடிவுக்கு வந்தது அலரி மாளிகைக்கு எதிரில் நடந்த போராட்டம்

10. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! வழங்கிய முதல் நியமனம் - முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Sri Lankan Political Newses Ranil Sworn

மேலும் படிக்க >>> ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்: செயலாளர் நாயகம் அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.