பன்னீர் பட்டர் மசாலா-வுக்கு 22% ஜிஎஸ்டி வரியா? நெட்டிசன்கள் கிண்டல்.. டிவிட்டரில் டிரென்டிங்..!

மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 18 முதல் ஒரு சில உணவு பொருட்களுக்கு கூடுதலான ஜிஎஸ்டி வரிவிதித்தது என்பதும் இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் உயர்ந்த உணவு பொருட்களின் வகைகளில் பன்னீர், பட்டர், மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.

இந்த நிலையில் பன்னீர், பட்டர் மற்றும் மசாலா ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளதால் பன்னீர் பட்டர் மசாலாவுக்கு இந்த மூன்று ஜிஎஸ்டி வரிகளின் கூட்டுதலாக ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளதா? என நெட்டிசன்கள் கலாய்ப்பது இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் கேரளா.. ஜிஎஸ்டி விதிக்க மாட்டோம் – பாலகோபால் அறிவிப்பு

பன்னீர் பட்டர் மசாலா

பன்னீர் பட்டர் மசாலா

ஒவ்வொரு இந்தியரும் பன்னீர் பட்டர் மசாலாவை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் குறிப்பாக சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கு மிகச் சிறந்த சைட் டிஷ் ஆக பன்னீர் பட்டர் மசாலா பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்கள் கேலி

நெட்டிசன்கள் கேலி

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஒருசில உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை அதிகரித்த நிலையில் பன்னீருக்கு 5%, பட்டருக்கு 12% மற்றும் மசாலாவுக்கு 5 சதவீதம் என அதிகரித்தது. இந்த நிலையில் இந்த மூன்றையும் கூட்டினால் 22% பன்னீர் பட்டர் மசாலாவுக்கு ஜிஎஸ்டி வரியா? என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து உள்ளனர். இதுகுறித்த மீம்ஸ்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிர்மலா சீதாராமன்
 

நிர்மலா சீதாராமன்

மேலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது என்றும், பேக்கிங் செய்யப்படாத அரிசி, பன்னீர் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கினால் அதற்கு கூடுதல் ஜிஎஸ்டி வரி பொருந்தாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் விளக்கம் அளித்திருந்தார்.

நெட்டிசன்களின் ஐடியா

நெட்டிசன்களின் ஐடியா

நிதியமைச்சரின் இந்த விளக்கத்திற்கும் நெட்டிசன்கள் தங்கள் கிண்டலை வித்தியாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அதாவது ஹோட்டல் உரிமையாளர்கள் மொத்தமாக பேக்கிங் செய்யப்படாத பன்னீர், பட்டர், மசாலாவை வாங்கி குவித்து ஜிஎஸ்டி வரியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்துள்ளனர்.

விலை உயர்வு நிச்சயம்

விலை உயர்வு நிச்சயம்

இது காமெடியாக பார்க்கப்பட்டாலும் உண்மையில் பன்னீர், பட்டர், மசாலா விலை உயர்வு காரணமாக ஹோட்டலில் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் விலை அதிகரிக்கத்தான் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 உணவு பிரியர்களுக்கு திண்டாட்டம்

உணவு பிரியர்களுக்கு திண்டாட்டம்

தினசரி உணவுப் பொருட்களான பன்னீர், பால், தயிர், கோதுமை மாவு, அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீது சமீபத்தில் ஜிஎஸ்டி விகிதங்கள் திருத்தப்பட்டன. இந்த உணவுப் பொருட்கள் இப்போது 5 சதவீத ஸ்லாப்பின் கீழ் வருகின்றன. இதன் காரணமாக, பன்னீர் மற்றும் பிற பால் பொருட்களின் விலை இனிமேல் அதிகரிக்கும். ஏற்கனவே விலை உயர்ந்த பன்னீர் உள்ளிட்ட பால் தயாரிப்புகளின் விலை சமீபத்தில் உயர்ந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளதால் உணவு பிரியர்களை திகைக்க வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Paneer Butter Masala is trending in twitter because of revised gst rates

Paneer Butter Masala is trending in twitter because of revised gst rates | பன்னீர் பட்டர் மசாலாவுக்கு 22 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியா? வேற லெவலில் நெட்டிசன்கள் கிண்டல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.