அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைவாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது.
அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீ ர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பததில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.