இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வரலாறு காணாத கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது. சில நாட்களாக தொடர்ந்து உக்கிரம் அடையும் வெயில் ஐரோப்பாவினையே முடக்கி போட்டுள்ளது எனலாம். சாலையில் மக்கள் நடமாட்டமும் மிக குறைவாகவே உள்ளது. பல நிறுவனங்கள், பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. இந்தியாவில் வெயில் காலங்களில், இந்த அளவிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும். ஆனால், ஐரோப்பாவில் இது வரலாறு காணாத அளவாகும். ஐரோப்பாவில் வாழும் மக்களுக்கு குளிரை மட்டும் தாங்கும் வகையில் இருக்கும் உடல்வாகும், உணவுமுறையும், இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என வல்லுநர்கள் கூறுன்றனர்.
இந்நிலையில், கடும் வெப்ப நிலை காரணமாக நாட்டில் உள்கட்டமைப்புகள் உருகும் பல படங்கள் கவலையைத் ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளத்தில் வெளியான ஒரு படத்தில், பெட்ஃபோர்ட்ஷையரின் சாண்டி நகரத்தில் ஒரு உருகிய ரயில்வே சிக்னலைக் காணலாம். இது தீவிர வெப்பநிலையால் பற்றிக் கொண்ட தீயின் விளைவாகும். ஈஸ்ட் கோஸ்ட் மெயின் லைனில் உள்ள சிக்னலின் படத்தை புதன்கிழமை (ஜூலை 20,) நெட்வொர்க் ரயில் வெளியிடப்பட்டது.
ரயில் நிலயங்களின் மேல்நிலை கம்பிகள், தடங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் சேதமடைந்ததால், இங்கிலாந்து முழுவதும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ட்விட்டரில், நெட்வொர்க் ரயில் பயணிகளுக்கு தெரிவித்தது. மேலும் நாள் முழுவதும் ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் தங்கள் ரயில் நிலையத்திற்கு வரும் முன் தங்கள் ரயில் விப்ரம் குறித்து புதுப்பிப்பைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்; வெப்ப அலையால் துவண்டு விழும் மக்கள்
வைரலாகும் புகைப்படத்தை இங்கே காணலாம்:
The East Coast Mainline has re-opened following a fire that spread to the track in Sandy, Bedfordshire – due to the extreme heat.
Disruption is still to be expected throughout the day, so check before you travel – @nationalrailenq.
https://t.co/4wBwJJ7g6T pic.twitter.com/qQ1fj0f0NG
— Network Rail (@networkrail) July 20, 2022
முதன்முறையாக, பிரிட்டனில் மிக அதிக அளவிலான வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. செவ்வாய்கிழமை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. லண்டனில் தட்ப வெப்ப நிலை புதன்கிழமை 26 செல்சியஸை (79 பாரன்ஹீட்) எட்டும் என்று வானிலைத் துறை கணித்துள்ளது, இது கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கோனிங்ஸ்பையில் ஒரு நாள் முன்பு 40.3C (104.4F) என்ற அளவில் வெப்ப நிலை பதிவானது.
மேலும் படிக்க | அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு
மேலும், கடுமையான வெப்பத்தால் லண்டனின் சில பகுதிகளில் காட்டுத் தீ பரவி பல வீடுகளை அழித்துள்ளது. லண்டன் மேயர் சாதிக் கான் இது குறித்து, கூறுகையில், ‘செவ்வாய்கிழமையன்று தீயணைப்பு வீரர்கள் துரிதாமாக செயலாற்றியுள்ளனர். 40.3C என்பது, இது வரை இல்லாத அளவு. நாட்டிற்கு மிகவும் வெப்பமான நாள் – இங்கிலாந்து தலைநகரில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 24 மணிநேரங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. இருப்பினும், மழை முன்னறிவிப்பு தலைநகருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது’ என்றார்.
இந்நிலையில், உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பெட்டேரி தாலாஸ் செவ்வாயன்று, வெப்ப அலைகளை மேலும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். வெப்பல் நிலை தொடர்ந்து அதிகரிக்கும் “எதிர்மறையான போக்கு” பல தசாப்தங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 2060 கள் வரை ஐரோப்பா முழுவதும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க | பிரிட்டனின் ‘அத்திப்பட்டி’; மாயமான கிராமத்தை வெளிகொணர்ந்த வெப்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ