பிரிட்டன் புதிய பிரதமர்: ரிஷி சுனக் உடன் போட்டி போடும் லிஸ் டிரஸ்.. யார் இவர்..?

பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் சரக்கு பார்ட்டி உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

போரிஸ் ஜான்சன் பதவி விலகியதால் அவருடைய Conservative Party ஆட்சியை இழக்கவில்லை, இதனால் பிரதமர் பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்கும் பணியில் பிரிட்டன் அரசு உள்ளது. புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காகப் பல பேர் போட்டிப்போட்ட நிலையில் பல சுற்றுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 5வது சுற்றில் இந்தியரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் என்ற பெண்ணும் போட்டிப்போடுகின்றனர். யார் இவர்..?

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

ரிஷி சுனக் - லிஸ் டிரஸ்

ரிஷி சுனக் – லிஸ் டிரஸ்

Conservative Party-யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நடந்த 5வது சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகளைப் பெற்றார். பல பேரை ஓரம்கட்டி கடைசிச் சுற்று வரையில் முன்னேறிய லிஸ் டிரஸ் 113 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் பிரதமர் போட்டிக்கு இறுதியாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

6 வார பிரச்சாரம்

6 வார பிரச்சாரம்

இந்நிலையில் அடுத்த 6 வாரத்திற்குப் பிரிட்டன் நாடு முழுவதும் இருக்கும் Conservative Party-யின் 2,00,000 உறுப்பினர்கள் மத்தியில் அடுத்தடுத்து தேர்தல் கூட்டங்கள், தேசிய விவாதங்கள், பிரச்சாரங்கள் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு நடத்தி புதிய பிரதமரை இக்கட்சி தேர்வு செய்து செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்கும்.

3வது பெண் பிரதமர்
 

3வது பெண் பிரதமர்

மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு லிஸ் டிரஸ் பிரிட்டன் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக அறிவிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் லிஸ் டிரஸ் பல முறை அவர் மார்கரெட் தாட்சர்-ஐ பின்பற்றுவதாக அறியப்பட்டு உள்ளார். சில நேரத்தில் லிஸ் டிரஸ், மார்கரெட் தாட்சர்-ஐ போலவே ஆடை அணிந்து வந்தது கவனிக்கத்தக்கது.

லிஸ் டிரஸ் பலம் - பிரெக்சிட்

லிஸ் டிரஸ் பலம் – பிரெக்சிட்

லிஸ் டிரஸ் அரசியலில் அவரது கடுமையான மற்றும் நேரடியான அணுகுமுறைக்காகப் பாராட்டப்படுபவர். பிரிட்டன் நாட்டின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்த அவர் லிஸ் டிரஸ், பிரெக்சிட் பிறகு கையெழுத்தான பல வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

ரஷ்யா- உக்ரைன் போர்

ரஷ்யா- உக்ரைன் போர்

இதுமட்டும் அல்லாமல் சமீபத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ரஷ்யா தொடுத்த போரை கண்டித்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் முக்கிய பங்காற்றினார். தற்போது நடந்துள்ள தேர்தலில் லிஸ் டிரஸ் பிரிட்டன் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் வரிக் குறைப்பு அறிவிப்பு மூலம் அதிகப்படியானோரின் நம்பிக்கையைப் பெற்றார்.

1997 முதல் அரசியலில்

1997 முதல் அரசியலில்

46 வயதான லிஸ் டிரஸ் 1997 முதல் Conservative Party-யின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார். 1996 முதல் 2000 வரையில் Shell நிறுவனத்தில் பணியாற்றிய லிஸ் டிரஸ், பின்னர் மேனேஜ்மென்ட் அக்கவுன்டென்ட் ஆக தகுதியை உயர்த்திக் கொண்டு கேபிள் & வையர்லெஸ் என்னும் நிறுவனத்தில் எக்னாமிக் டைரக்டர் ஆகப் பதவி உயர்வு பெற்றார்.

 முதல் வெற்றி

முதல் வெற்றி

2010ல் சௌத் வெஸ்ட் நார்போக் பகுதியில் இருந்து எம்பி-யாகத் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார், இதற்கு முன்பு இரண்டு தேர்தலில் இவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி துறையின் செயலாளர் ஆக பதவி வகித்தார்.

பல முக்கியப் பதவிகள்

பல முக்கியப் பதவிகள்

அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான மாநிலச் செயலாளர் பதவி, கருவூல முதன்மை செயலாளர், சர்வதேச வர்த்தகத்திற்கான மாநில செயலாளர் மற்றும் வர்த்தக வாரியத்தின் தலைவர், பெண்கள் மற்றும் சமத்துவத்துறை அமைச்சர் பதவி, கடைசியாக வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் பதவியில் இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who is Liz Truss, Rishi Sunak’s challenger in UK prime minister Race; September 5 results

Who is Liz Truss, Rishi Sunak’s challenger in UK prime minister Race; September 5 results பிரிட்டன் புதிய பிரதமர்: ரிஷி சுனக் உடன் போட்டி போடும் லிஸ் டிரஸ்.. யார் இவர்..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.