சென்னை: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளை ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்திருந்தால் டெலிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் போன்களில் செயலிகளை டவுன்லோட் செய்ய பெரும்பாலும் பயன்படுத்துவது கூகுள் பிளே ஸ்டோரை தான். இந்த தளம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு நம்பகத்தன்மை மிக்கதாக செயல்பட்டு வருகிறது.
அதன் காரணமாக அவ்வப்போது பயனர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலிகளை அடையாளம் கண்டு பிளே ஸ்டோரிலிருந்து நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும். கடந்த காலங்களில் இது போன்ற நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதோடு பயனர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொள்கை வகுத்து கடைப்பிடித்து வருகிறது கூகுள்.
இந்நிலையில், மால்வேர் பாதிப்புக்குள்ளான 50க்கும் மேற்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளதாக கிளவுட் செக்கியூரிட்டி நிறுவனமான Zscaler தெரிவித்துள்ளது. ஜோக்கர், ஃபேஸ்ஸ்டீலர், கோபர் போன்ற மால்வேர்கள் இந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும். இதன் மூலம் பயனர்களின் தனிநபர் தரவுகள் களவு கொள்ளப்படுவதாக தெரிகிறது.
இது குறித்து அறிந்ததும் கூகுள் சம்மந்தப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி உள்ளது. இருந்தாலும் இதனை ஏற்கெனவே பல்லாயிரம் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தங்களது போன்களில் இன்ஸ்டால் செய்துள்ளனர். அதனை அவர்கள் உடனடியாக அன்-இன்ஸடால் செய்வது அவசியமாகி உள்ளது.
நீக்கப்பட்ட செயலிகளின் விவரம்: சிம்பிள் நோட் ஸ்கேனர், யுனிவர்சல் PDF ஸ்கேனர், பிரைவேட் மெசேஞ்சர், பிரீமியம் எஸ்எம்எஸ், ஸ்மார்ட் மெசேஜஸ், டெக்ஸ்ட் எமோஜி எஸ்எம்எஸ், பிளட் பிரஷர் செக்கர், Funny கீபோர்டு, மெமரி சைலன்ட் கேமரா, கஸ்டம் தீம்டு கீபோர்டு, லைட் மெசேஜஸ், தீம்ஸ் போட்டோ கீபோர்டு, சென்ட் எஸ்எம்எஸ், தீம்ஸ் சாட் மெசேஞ்சர், இன்ஸ்டன்ட் மெசேஞ்சர், கூல் கீபோர்டு, ஃபான்ட்ஸ் எமோஜி கீபோர்டு, மினி PDF ஸ்கேனர், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மெசேஜஸ், கிரியேட்டிவ் எமோஜி கீபோர்டு, பேன்சி எஸ்எம்எஸ், பெர்சனல் மெசேஜ், Funny எமோஜி மெசேஜ், மேஜிக் போட்டோ எடிட்டர், புரொஃபஷனல் மெசேஜஸ், ஆள் போட்டோ டிரான்ஸ்லேட்டர், சாட் எஸ்எம்எஸ், ஸ்மைல் எமோஜி, வாவ் டிரான்ஸ்லேட்டர், ஆள் லாங்குவேஜ் டிரான்ஸ்லேட், கூல் மெசேஜஸ், பிளட் பிரஷர் டைரி, சாட் டெக்ஸ்ட் எஸ்எம்எஸ், ஹாய் டெக்ஸ்ட் எஸ்எம்எஸ், எமோஜி தீம் கீபோர்டு, ஐமெசேஜர், டெக்ஸ்ட் எஸ்எம்எஸ், கேமரா டிரான்ஸ்லேட்டர், கம் மெசேஜஸ், பெயின்டிங் போட்டோ எடிட்டர், ரிச் தீம் மெசேஜ், குயிக் டாக் மெசேஜ், அட்வான்ஸ்டு எஸ்எம்எஸ், புரொஃபஷனல் மெசஞ்சர், கிளாசிக் கேம் மெசஞ்சர், ஸ்டைல் மெசேஜ், பிரைவேட் கேம் மெசேஜஸ், டைம்ஸ்டாம்ப் கேமரா, சோஷியல் மெசேஜ்.