புதுடில்லி: புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்முவை தேர்வு செய்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் மோடி , மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா, பா.ஜ., தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரதமர் கூறுகையில் திரவுபதி முர்முவின் வெற்றிக்கு பின்னால் உழைத்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி என தெரிவித்தார்.
முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடி வாழ்த்து
திரவுபதியின் மகத்தான வெற்றி உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் மோடி, முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்., எம்.பி. ராகுல் வாழ்த்து
15வது ஜனாதிபதி ஆகவுள்ள திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் வாழ்த்து
செழிப்பான அரசியலமைப்பு ஜனநாயகத்தை உறுதிபடுத்த நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இபிஸ் வாழ்த்து
தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, அதிமுக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement