மதுரையில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(23). இவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஆனந்தன், உறவினரான முத்து கணேசனுடன் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது தொட்டப்பநாயக்கனூர் தனியார் பள்ளிய அருகே சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் முத்துகணேசன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.