RSS veteran, known Tamil face is temporary replacement for Dhankhar in Bengal Raj Bhavan: மேற்கு வங்க ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஜக்தீப் தங்கருக்கு பா.ஜ.க.,வின் தற்காலிக மாற்றாக தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் வீரர்களில் ஒருவரும், தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவருமான இல.கணேசன் உள்ளார்.
தற்போது மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: நீட் விலக்கு மசோதா; தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே பதவியில் இருந்து வரும் நிலையில், தனது வாக்கை மணிப்பூர் மாநிலத்திற்கு மாற்றிய அரிய மணிப்பூர் கவர்னர் என்று இல.கணேசன் அறியப்படுகிறார். இல.கணேசன் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்குச் சென்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 5 அன்று, இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சகோல்பந்த் தொகுதியில் வாக்காளராகச் சேர்க்கப்பட்டார்.
மக்களைச் சந்தித்து, மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து, அரசுத் திட்டங்களைப் பற்றிப் பேசுவது என தீவிரமாக செயல்படும் ஆளுநராக இல.கணேசன் இருக்கிறார். கொரோனா காலத்தில், வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மதங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக இல.கணேசன் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றார்.
மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதால், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் குறைவாகவே உள்ளன.
ஆனால், 2019 ஜூலையில் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து, முதல்வர் மம்தா பானர்ஜியும், ஆளுநர் ஜெக்தீப் தங்கரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்கத்தில் அப்படி இருக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி அவரை துணை ஜனாதிபதி வேட்பாளாராக அறிவித்ததன் மூலம், ஜெக்தீப் தங்கர் மத்திய அரசிற்கு செல்ல உள்ளார்.
1990-களின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாஜகவுக்குச் சென்று, கட்சியின் பொதுச் செயலாளராகப் பணிபுரிய அனுப்பப்பட்டு, 2003-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தபோது, பிற மொழிகளைத் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளைப் பேசும் பலமொழி வல்லுநரான இல.கணேசன், கட்சியின் கடினமான காலங்களில் கட்சிக்காக உழைத்தவர். அவரது காலத்தில், பா.ஜ.க ஜெ.ஜெயலலிதாவின் அ.தி.மு.க.,வுடன் இணைந்தது, குறுகிய காலத்திலே அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசாங்கத்திற்கான ஆதரவை அ.தி.மு.க வாபஸ் பெற்றதையடுத்து, வாஜ்பாய் அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்ச்சியடைந்தது.
பின்னர் சோ.ராமசாமியுடன் இணைந்து தி.மு.க.,வை பா.ஜ.க பக்கம் அழைத்துச் சென்ற பெருமை இல.கணேசனுக்கு உண்டு. இலங்கை, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பா.ஜ.க.,வுக்கு தொடர்புகளை வளர்க்க இல.கணேசன் உதவியதாகவும் நம்பப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள புதிய தலைமுறை பா.ஜ.க தலைவர்களைப் போலல்லாமல், இல.கணேசன் அரசியல் தளம் முழுவதும் உள்ள தலைவர்களுடன் சுமுகமான உறவை அனுபவித்தார், இதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட.
சாதியால் கட்டுண்ட தமிழகத்தில், தஞ்சாவூரில் பிராமண குடும்பத்தில் பிறந்த இல.கணேசன், ஜாதி சீட்டு விளையாடாததற்காகவும் பாராட்டப்பட்டார். சிக்கனமான வாழ்க்கை வாழ்வதற்காக, ஒரு சிறிய பையுடன் பயணிக்கும் ஒரு தலைவராக அவரது படம் மக்கள் மனதில் நீடித்துள்ளது.
இல.கணேசன் கட்சிக்கான பாடல்கள் உட்பட பல கட்டுரைகளை எழுதினார், தமிழ்நாடு பா.ஜ.க.,வின் பத்திரிக்கையான “ஒரே நாடு” இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் தமிழறிஞர்கள் குழுக்கள் எழுவதற்காக “பொற்றாமரை” இதழை தொடங்கினார்.
இருப்பினும், மேலோட்டமான ஆளுமையான அவருக்கு கீழ் உள்ள தலைவர்கள் வளர வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இல.கணேசனை “சுயநலம்” கொண்டவர் என்றும், குறிப்பாக அவரது குடும்பத்தை ஊக்குவிப்பவர் என்றும் அந்த தலைவர் கூறுகிறார். “கட்சியில் அவரது அண்ணன் மற்றும் அண்ணியின் ஆதிக்கம் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. கட்சி பத்திரிக்கையில் தனது மைத்துனரை முக்கியப் பிரமுகராகவும் ஆக்கினார்” என்று அந்த தலைவர் கூறினார்.
மற்றொரு பா.ஜ.க, தலைவர் கூறியதாவது: மணிப்பூரில் நடந்த கவர்னர் மாநாடு ஒன்றில், அவரது மருமகன் சிறப்பு பணி அதிகாரியாக செயல்பட்டது குறித்து, உயர்மட்ட தலைமைக்கு புகார் எழுந்தது.
இல.கணேசன் மற்றும் அவரது உதவியாளர்களின் நீண்டகாலக் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி குடியேறியிருந்த மந்தநிலையைப் போக்க அவரைப் போன்ற இளைஞர்கள் போராடினர் என்றும் அந்த தலைவர் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: ஜிம்மி லீவோன், இம்பால்