ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்குகளை வாங்கி வைக்கலாம்.. நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்!

இந்திய பங்கு சந்தையின் சந்தையின் தந்தை என்று அழைக்கும் வாரன் பஃபெட் பங்கு சந்தை முதலீடுகளில் பிரபலமானவர். இவர் செய்யும் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெற்ற பங்குகளகவும் உள்ளன.

ஏனெனில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கும் பங்குகள் ஏற்றம் காணலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனாலேயே சிறிய முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெறும் பங்குகளாக உள்ளன.

இதற்கிடையில் முதல் காலாண்டு முடிவினை பார்த்து வரும் சில்லறை முதலீட்டாளர்கள், சிறு முதலீட்டளார்களும் முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோ பட்டியலை அலச தொடங்கியுள்ளனர்.

இலங்கை வழியில் பாகிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ்.. எப்படி தெரியுமா?

எஸ்கார்ட்ஸ் குபோட்டா

எஸ்கார்ட்ஸ் குபோட்டா

இதன் மூலம் சந்தையின் போக்கினை தெரிந்து கொள்ள கண்கானித்து வருகின்றனர். அந்த வகையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்த காலாண்டில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த எஸ்கார்ட்ஸ் குபோட்டா பங்கினை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது சமீபத்தில் அவரின் போர்ட்போலியோவில் இடம் பெற்றுள்ள பங்குகளில் ஒண்றாக உள்ளது. ஜூலை 2022ல் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் அதன் லைஃப் டைம் உச்சமான 12,660.70 புள்ளிகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜூன் காலாண்டில்  பங்குகளை வாங்கியிருக்கலாம்

ஜூன் காலாண்டில் பங்குகளை வாங்கியிருக்கலாம்

இப்பங்கினில் ஏப்ரல் – ஜூன்2022 வரையிலான காலகட்டத்தில், எஸ்கார்ட்ஸ் குபேடாவின் பங்குதாரர் முறையின் படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் 18,30,388 பங்குகளை வைத்துள்ளார். இது நிறுவனத்தில் செலுத்தப்பட்ட மொத்த மூலதனத்தில் 1.39% ஆகும். இருப்பினும் நிறுவனத்தின் பங்குதாரர் முறையில் ஜனவரி – மார்ச் காலாண்டில் ஜுன்ஜுன்வாலா பெயர் இடம்பெறவில்லை. ஆக ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ஜுன்ஜுன்வாலா இந்த பங்குகளை வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கும் விலை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பங்கு விலை வரலாறு
 

பங்கு விலை வரலாறு

எஸ்கார்ட்ஸ் குபோடா பங்கு விலையானது கடந்த ஒரு மாதத்தில் 14% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஓராண்டில் இந்த நிறுவன பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் 1670 ரூபாய் முதல் 1729 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. இந்த காலகட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 48% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 5 ஆண்டுகளில் 655 ரூபாயில் இருந்து, 1729 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது 165% ஏற்றம் கண்டுள்ளது.

ஃபெடரல் வங்கி

ஃபெடரல் வங்கி

இதே ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பட்டியலில் உள்ள மற்றொரு பங்கு ஃபெடரல் வங்கியாலும். முதல் காலாண்டு முடிவுக்கு மத்தியில் இப்பங்கின் விலையானது 110 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து 108 ரூபாய்க்கு மேலாகவே இருந்தால் மீடியம் டெர்மில் 115 ரூபாயினை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது 125 ரூபாய் என்ற லவலை எட்டலாம் என கணித்துள்ளனர்.

வங்கி பங்கில் மொத்த இருப்பு

வங்கி பங்கில் மொத்த இருப்பு

மார்ச் காலாண்டு நிலவரப்படி ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில், ராகேஷ் & ரேகா ஜுன்ஜுன்வாலா பெயரில் 2,10,00,000 அல்லது 1.01% வைத்துள்ளனர். தனிப்பட்ட முறையில் ராகேஷ் வசம் 5,47,21,060 பங்குகளை அல்லது 2.64% பங்குகளை வைத்துள்ளனர். ஆக மொத்தம் தம்பதியினரிடம் சேர்த்து 3.65% பங்குகள் உள்ளன.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh jhunjhunwala portfolio stock may rise in coming days: do you have any

Rakesh jhunjhunwala portfolio stock may rise in coming days: do you have any/ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்குகளை வாங்கி வைக்கலாம்.. நிபுணர்கள் சூப்பர் அட்வைஸ்!

Story first published: Thursday, July 21, 2022, 18:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.