சென்னை : ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் இன்று அகற்றப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை வருவாய் துறை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கிறது. அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜர் பெற்றுக் கொள்கிறார்.