பாலக்காடு: லஞ்சம் வாங்கிய ‘சப்ளை கோ’ விற்பனை அங்காடி ஊழியர், கையும், களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலக்காடு மாவட்டம், வடவனுாரில், பொது வினியோகத்துறையின் கீழ் செயல்படும் ‘சப்ளை கோ’ விற்பனை அங்காடியில், உதவி விற்பனையாளராக பணிபுரிபவர் மணிகண்டன் 38. இவரை நேரில் சந்தித்த, எர்ணாகுளத்தை தலைமையாக கொண்டு செயல்படும் மசாலா நிறுவனத்தின் ஊழியர் விஷ்ணு பிரசாத், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை, அங்காடியில் விற்பனை செய்ய வேண்டி அனுமதி கோரினார்.
14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் கொள்வதாக கூறிய மணிகண்டன், ரூ.1,400 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, பாலக்காடு லஞ்ச ஒழிப்பு துறையில், விஷ்ணு பிரசாத் புகார் அளித்தார். அதிகாரிகளின் அறிவுரைப்படி, நேற்று, லஞ்சம் வழங்கிய போது பிடிபட்டார். இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலக்காடு: லஞ்சம் வாங்கிய ‘சப்ளை கோ’ விற்பனை அங்காடி ஊழியர், கையும், களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலக்காடு மாவட்டம், வடவனுாரில், பொது வினியோகத்துறையின் கீழ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்