4ஜி தொலைபேசி சேவையுடன் ஒப்பிடுகையில் 5ஜி சேவைக்கான கட்டணம் 10 முதல் 20 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும் என தொலைத்தொடர்பு நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிவேக இணையதள சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு வருகிற 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானியின் குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை, பயனர்களுக்கு கிடைக்கவுள்ள நிலையில், தொடக்கத்தில் 5ஜி கட்டணம் 4ஜியைவிட 10 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அதிக இணைப்புகளைப் பொருத்து படிப்படியாக அது 4ஜி சேவைக் கட்டணத்திற்கே கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM