68 நகரங்களில் 2,877 எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்.. எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு கொண்டாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிவருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிப்பதால் அதற்கான சார்ஜிங் செய்யும் நிலையங்களும் அதிகரிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது 25 மாநிலங்களில் 68 நகரங்களில் 2,877 புதிய எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூகுள்-ன் புதிய சேவை.. இனி ஜாலி தான்..!

 ஃபேம் இந்தியா

ஃபேம் இந்தியா

கனரக தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் 2,877 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை ஃபேம் இந்தியா அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்

எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது என கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1,576 எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன.

1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 

1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல்கட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை 479 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கூடுதலாக ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ஏப்ரல் 1, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

6,315 எலக்ட்ரிக் பஸ்கள்

6,315 எலக்ட்ரிக் பஸ்கள்

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஜூலை 15 வரை 4.7 லட்சம் மின்சார வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், 65 நகரங்களுக்கு 6,315 எலக்ட்ரிக் பஸ்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு ஏற்ப நாட்டில் மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு

மத்திய அரசு

எலக்ட்ரிக் வாகங்களுடன் தொடர்புடைய உள் எரிப்பு இயந்திரங்களுடன் (ICE) ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் அதிக முன்கூட்டிய செலவுகள் மற்றும் சில அம்சங்கள் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களால் ஏற்படும் சவால்களை மனதில் வைத்து, அந்த சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார்

அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார்

மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ’25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார சார்ஜ் நிலையங்களுக்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்றும், எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் இன்னும் அதிகமான அளவில் எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

2,877 EV charging stations sanctioned under FAME–II in 68 cities across India

2,877 EV charging stations sanctioned under FAME–II in cities across India | 68 நகரங்களில் 2,877 எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்.. எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு கொண்டாட்டம்!

Story first published: Thursday, July 21, 2022, 8:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.