8000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடும் போர்டு.. அச்சத்தில் ஊழியர்கள்!

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஊழியர் தொகுப்பில் 8000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது நிறுவனம் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் செலவினை குறைக்க திட்டமிடுவதாக கூறப்படுகின்றது.

அதோடு தற்போது நிறுவனம் மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தபோவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஃபோர்டு ஆலையில் மீண்டும் 1100 பேர் பணி தொடக்கம்.. மற்ற ஊழியர்களின் நிலை?

 விரைவில் அறிவிப்பு வரலாம்

விரைவில் அறிவிப்பு வரலாம்

எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஃபோர்டு நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்கத்தில் யார் யார் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை இன்னும் திட்டமிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

 என்ன ஆலோசனை?

என்ன ஆலோசனை?

இது வரவிருக்கும் சம்மருக்குள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஃபோர்டு செய்தியாளர் சந்திப்பில் நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி குறித்தான ஆலோசனை நடத்தியது. இதில் மின்சார வாகன உற்பத்தியினை 2023ல் 6,00,000 வாகனங்களாக உற்பத்தி செய்யவும், இதே 2026ல் 2 மில்லியன் யூனிட்களாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 நவீனமயமாக்க திட்டம்
 

நவீனமயமாக்க திட்டம்

அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாட்டின் மத்தியில் அதனை நோக்கி வழி நடத்துவதற்கும், எங்கள் வேலையை மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்துகிறோம் என்றும் ஃபோர்டு அறிவித்துள்ளது. அதோடு அடுத்த கட்ட வளர்ச்சி பாதையினை நோக்கி நகர நவீன மயமாக்க திட்டமிட்டுள்ளது.

 மின்சார வாகனத்தில் செலவு

மின்சார வாகனத்தில் செலவு

எங்களது போட்டியாளர்களுடன் போட்டியிட கூடியவர்களாகவும், அதனை உறுதி செய்வதற்கு எங்கள் செலவினை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த மார்ச் மாதத்தில் ஃபோர்டு நிறுவனம் 2026ம் ஆண்டில் மின்சார வாகனங்களுக்கான செலவினத்தை, 30 பில்லியன் டாலரில் இருந்து, 50 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

லாபம் இருக்காது

லாபம் இருக்காது

 

அமெரிக்க நிறுவனம் 2025ல் வரையில் அடுத்த தலைமுறை மாடல்கள் உற்பத்தியினை தொடங்கும் வரையில் அதன் மின்சார வாகன வணிகத்தில் லாபம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

போர்டின் இந்த கணிப்பின் மத்தியிலும், சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் தான் இந்த பணி நீக்கம் குறித்தான திட்டம் வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ford motors plans to cut 8000 jobs

Ford motors plans to cut 8000 jobs/8000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடும் போர்டு.. அச்சத்தில் ஊழியர்கள்!

Story first published: Thursday, July 21, 2022, 14:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.