Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியானது. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.. தமிழிசை
புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும். புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் திணிப்பதாக இல்லை. இன்னொரு மொழியை கற்பதால், தாய்மொழியை அவமதிப்பது ஆகாது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது புதிய கல்விக்கொள்கையின் நோக்கம். என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் புதன்கிழமை மேலும் 528 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 5,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு கொரோனாவுக்கு 2,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்பு
இலங்கையில் மக்கள் போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபட்ச சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரணில் விக்கிரமசிங்க அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்கிறார்.
கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் அதிபராக தொடர்ந்து செயல்படுவார். 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று நேரில் விசாரணை நடத்துகிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தகுதிச்சுற்றில் 59.60 மீட்டர் தூரம் எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளனர்.
இலங்கை மன்னார் கடற்பரப்பில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு, 2 நாளுக்கு முன்னதாகவே கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 17ஆம் தேதி கலவரம் நடந்த நிலையில், 15 ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் வரி ஏய்ப்பு புகாரில், கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.