டெல்லி: அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு வருகிறது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதிமுக கட்சியின் மொத்த வடிவமும் மாற்றப்பட்டுள்ளதால் மனுக்களை விரைந்து விசாரிக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்தது.