ஆண்-பெண், லெஸ்பியன், Gay திருமணம் தெரியும்… ஆனால் இவர்கள் திருமணம் செய்தது எதை தெரியுமா?

ஆண்டாண்டு காலமாக ஆண் – பெண் திருமணம் மட்டுமே நடந்து வரும் நிலையில் நாகரீக மாற்றத்தின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக லெஸ்பியன் மற்றும் Gay திருமணங்களும் நடைபெற்றுவருகின்றன. இவ்வகை திருமணங்களை ஒரு சில நாடுகள் சட்டபூர்வமாக ஏற்று கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு சிலர் சுவர், நாய், முதலை, செக்ஸ்பொம்மை, ரைஸ் குக்கர் என வித்தியாசமாக விலங்குகள் மற்றும் பொருட்களுடன் திருமணம் செய்துள்ளனர்.

இந்த வகை திருமணத்திற்காக அவர்கள் அதிக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆடம்பர வித்தியாசமான திருமணங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

பூனையை மணந்த பெண்

வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதையும், பூனையிலிருந்து பிரிக்கப்படுவதையும் தவிர்க்க, இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான 49 வயது டெபோரா ஹாட்ஜ் என்ற பெண், பூனையை திருமணம் செய்ய முடிவு செய்தார். டெபோரா ஹாட்ஜ் தனது பூனைக்கு “இந்தியா” என்றும் பெயர் வைத்தார்.

சுவரை மணந்த பெண்

சுவரை மணந்த பெண்

பா ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் சுவர் ஒரு கேரக்டராக இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஸ்வீடிஷ் பெண் ஒருவர் தனது இளம் வயதில் சுவரின் மீது விழுந்தார். அப்போதிருந்து, அவர் பல ஆண்டுகளாக அந்த சுவரை காதலித்து சுவரை திருமணம் செய்யவும் முடிவு செய்தார். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது என் கணவரை சிதைத்துவிட்டனர்’ என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

பூனையை மணந்த இளைஞர்
 

பூனையை மணந்த இளைஞர்

2010 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் தபால்காரர் தான் ஆசையாய் வளர்த்த பூனையை மணந்தார். ஆஸ்துமா மற்றும் உடல் பருமனால் அவதிப்பட்ட பூனை விரைவில் இறந்துவிடும் என்று முடிவு செய்து செண்டிமெண்ட்டாக பூனை இறக்கும் முன் திருமணம் செய்து கொண்டார்.

ஈபிள் கோபுரத்தை மணந்த பெண்

ஈபிள் கோபுரத்தை மணந்த பெண்

Erika LaBrie என்ற இந்த 50 வயது பெண், 2007ஆம் ஆண்டு ஈபிள் கோபுரத்தை “திருமணம்” செய்தபோது, ​​உலகமே அவரை வித்தியாசமாக பார்த்தது. இதற்கான விழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்தது. பின்னர் அவர் தனது குடும்பப்பெயரை “ஈஃபில்” என்று மாற்றிக்கொண்டதோடு தனது பெயரையும் எரிகா ஈஃபில் மாற்றினார்.

 தன்னை தானே மணந்த பெண்

தன்னை தானே மணந்த பெண்

இந்த கூத்து இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நடந்தது. 24 வயதான க்ஷாமா பிந்து, தான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், ஆனால் மணப்பெண்ணாக மாற விரும்புவதாகவும் கூறியதோடு தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இந்தியாவின் முதல் தன்னை தானே திருமணம் செய்யும் நிகழ்வு இந்த ஆண்டு ஜூன் 8 அன்று வதோத்ராவில் உள்ள க்ஷாமாவின் வீட்டில், பாரம்பரிய விழாவுடன் நடந்தது.

வீடியோ கேம் கேரக்டரை மணந்த ஜப்பானியர்

வீடியோ கேம் கேரக்டரை மணந்த ஜப்பானியர்

38 வயதான ஜப்பானியர் Akihiko Kondo என்பவர் Hatsune Miku என்ற வீடியோகேம் கற்பனை கதாபாத்திரத்தை மணந்தார். திருமணத்திற்கு பின்னர் அந்த கேரக்டருக்கு சாகும் வரை உண்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்தார்.

பாம்பை திருமணம் செய்த ஒடிசா பெண்

பாம்பை திருமணம் செய்த ஒடிசா பெண்

பூனைகள், நாய்கள் மற்றும் தங்களை தாங்களே திருமணம் செய்து கொள்வதை கூட காமெடி என நினைத்து ஏற்று கொள்ளலாம். ஆனால் 2006 ஆம் ஆண்டில், ஒடிசாவை சேர்ந்த பிம்லா தாஸ் என்ற பெண் ஒரு பாம்பை மணந்தார், அவரது கனவில் பாம்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதால் பாம்பை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் இவர் தான் திருமணம் செய்த பாம்பு எனது முந்தைய பிறவி கணவர் என்றும், அதனால் தான் நான் பாம்பை திருமணம் செய்துகொண்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

நாயை மணந்த பெண்

நாயை மணந்த பெண்

2019 ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் தனது நாயை திருமணம் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆண்களுடன் தனது உறவு முடிந்துவிட்டதாகவும், தனது வாழ்நாள் முழுவதையும் தனது நாய் கணவருடன் செலவிட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர்

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர்

கஜகஸ்தான் பாடிபில்டர் ஒருவர் தனது செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு நவம்பரில் இந்த திருமணம் நடந்தது. அந்த பொம்மையுடன் தான் உறவும் வைத்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலையை மணந்த மெக்சிகோ மேயர்

முதலையை மணந்த மெக்சிகோ மேயர்

ஜூலை 2022ஆம் ஆண்டு மெக்சிகோ மேயர் முதலை மணமகளை பாரம்பரிய இசையுடன் ஒரு வண்ணமயமான விழாவில் திருமணம் செய்துகொண்டார். அந்த முதலையை அவர் குட்டி இளவரசி என்று அழைத்து வருகிறார். ஏழு வயதான அந்த முதலை தன்னுடைய தாய் பூமியை குறிக்கும் தெய்வம் என்றும் அவர் நம்புகிறார்.

ரைஸ் குக்கரை திருமணம் செய்த இந்தோனேசியர்

ரைஸ் குக்கரை திருமணம் செய்த இந்தோனேசியர்

அக்டோபர் 2021ஆம் ஆண்டு இந்தோனேஷியாவை சேர்ந்த ஒருவர் ஒரு ரைஸ் குக்கரை ‘திருமணம்’ செய்தார். அன்றாட உணவு தயாரிக்க பயன்படும் மின்சார ரைஸ் குக்கருக்கு மணப்பெண் போல் முக்காடு அணிந்து, திருமண உடைக்கு ஏற்பாடு செய்து திருமணம் செய்து கொண்டார். தனக்காக சமைக்கும், வெள்ளை நிறத்தில் இருக்கிறது மற்றும் அது பேசாது என ரைஸ் குக்கரை மணந்ததற்கு அவர் மூன்று காரணங்களை கூறினார்.

செலவு

செலவு

மேற்கண்ட வினோதமான திருமணத்தை சிலர் ஆடம்பரமாகவும் அதிக செலவு செய்தும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Love Is Actually Blind is true, marriage with Walls, Crocodiles, Sex Dolls!

Love Is Actually Blind is true, marriage with Walls, Crocodiles, Sex Dolls! |ஆண்-பெண், லெஸ்பியன், Gay திருமணம் தெரியும்… ஆனால் இவர்கள் திருமணம் செய்தது எதை தெரியுமா?

Story first published: Friday, July 22, 2022, 8:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.